BIG NEWS!! ஆகஸ்ட் 4ல் தமிழகம் முழுவதும் 1,00,000 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!! 

 

இன்று காலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மஹாலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த  விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய  அகில இந்திய செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

தேர்தல் காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பலவித சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான உத்தரவாதத்தை கூட சட்டமன்றத்தில் கூறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 1 லட்சம் ஊதியம் பெறுவோருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். 


இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசை கண்டித்தும், தொடக்கப் பள்ளிகளில் முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுத்து வருகின்றனர். அவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடியாக  சுமார் 14,000 காலியிடங்களை நிரப்பி ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். இவைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆகஸ்ட்  4 ம் தேதி மாலை தமிழகத்தின் நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 1 லட்சம்  ஆசிரியர்கள் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதன் பிறகும் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்." என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?