BIG NEWS!! ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! உடனடி அமல்!!

 

இந்தியாவில் தொலை தூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் தேர்வு செய்வது பேருந்து, கார் இவைகளை காட்டிலும்   ரயில் பயணங்களையே. அதிலும் குறிப்பாக இரவில் பயணம் செய்ய முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். அமைதியான பயணம், கழைப்பின்மை, தூக்கம்,  பாதுகாப்பு எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ரயில் பயணங்களில் இரவு முழுவதும் செல்போனில் பேசிக்கொண்டே இருத்தல் , பாட்டு கேட்பது, லேப்டாப்பில் சத்தமாக படம் பார்த்தல் இவைகளால் சக பயணிகள்  முகம் சுழிக்கும் வகையில் அமைந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஏனெனில் முன்பு இருந்ததை விட தற்போது நடைமுறைகள் அனைத்தும் மாறி விட்டன. 


இதனை கருத்தில் கொண்டு  இந்தியன் ரயில்வே நிர்வாகம் இரவுப் பயண விதிகளில் அதிரடி மாற்றங்களை  செய்துள்ளது. குறிப்பாக இரவுப் பயண விதிகளில் சில புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி ரயிலில் இரவு நேரப்பயணங்கலில் மொபைலில்  சத்தமாக பேச கூடாது. உரத்த குரலில் பாடல்களைக் கேட்க கூடாது. இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும். மீறி செயல்படுபவர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டால் இந்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்  பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் உள்ள சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.), மின்சார சாதனங்கள் பராமரிப்பவர்கள் (எலக்ட்ரீஷியன்), உணவு பரிமாறும் பிரிவு ஊழியர்கள் (கேட்டரிங்) மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றைப் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின்  அனைத்து மண்டலங்களுக்கும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்தவும்  அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் பயணங்களின் போது ஏற்படும் அசௌகர்யங்களுக்கு ரயில்வே ஊழியர்களே பொறுப்பு என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இந்தியன் ரயில்வேயின் இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!