#BREAKING : அதானி குழும தலைவர் கெளதம் அதானிக்கு குளோபல் லீடர்ஷிப் விருது!
இன்று டெல்லியில் நடைப்பெற்ற யுஎஸ்ஐபிசியின் இந்தியா ஐடியாஸ் உச்சிமாநாட்டில் அதானி குழும தலைவர், நிறுவனர் கெளதம் அதானிக்கு குளோபல் லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவை தளமாகக் கொண்ட முன்னணி நிறுவனமான BIZOX வழங்கும் மிகவும் மதிப்புமிக்க கார்ப்பரேட் கௌரவங்களில் குளோபல் லீடர்ஸ் விருது முக்கியமானது. கெளதம் அதானி தற்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார், சமீபத்தில் உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார், இப்போது ஒரு மதிப்புமிக்க விருதைப் பெற்றிருக்கிறார் கெளதம் அதானி.
அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கௌதம் அதானிக்கு குளோபல் லீடர்ஷிப் விருதை அறிவித்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் கவுதம் அதானிக்கு குளோபல் லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பட்டத்தைப் பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தற்போது கெளதம் அதானிக்கு முன்னால் டெஸ்லாவின் எலோன் மஸ்க் மற்றும் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மட்டுமே உள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!