undefined

#BREAKING: பெரும் துயரம்! விஷம் கலந்த குளிர்பானம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைப் பலனின்றி மரணம்!

 

தனது மகளுக்கு வகுப்பில் போட்டியாக, நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவனை, குளிர்பானத்தில் விஷம் வைத்து கொல்ல முயற்சித்த விஷயம் புதுவையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனதில் எவ்வளவு வன்மமும், பொறாமையும் புகுந்திருக்கிறது என்பதற்கான உதாரணமாக இருக்கிறது இந்த சம்பவம். கொஞ்சம் தாமதித்திருந்தாலும், உயிரையே பறித்திருக்கும். மாணவர்களுக்குள் போட்டி, பொறாமை இருக்க கூடாது. நண்பர்களாக பழக வேண்டும் என்று போதிக்க வேண்டிய பெற்றோர்களே இப்படியெல்லாம் வன்மத்தோடும், பொறாமையோடும் இருப்பார்களா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வகுப்பில் தனது மகளை விட நன்றாகப் படிக்கும் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்தது அம்பலமானது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் காரைக்கால் நியாயவிலைக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலையில் சென்ற சினுவன் மதியம் வீடு திரும்பிய நிலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் காவலாளி கூல்டிரிங்ஸ் கொடுத்ததாகவும், அதை சாப்பிட்டதிலிருந்து வாந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் பெற்றோர்கள் சேர்த்தனர். மேலும் பள்ளியில் சென்று விசாரித்த போது மாணவனின் பெற்றோர்கள் கொடுத்த குளிர்பானம் மட்டுமே மாணவருக்கு வழங்கப்பட்டதாக பள்ளியில் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தாங்கள் குளிர்பானம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, மாணவன் பால மணிகண்டன் உறவினர் என ஒருவர் குளிர்பானம் வழங்கியதாகத் தெரிவித்து உள்ளார்.  இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவன் பயிலும் அதே வகுப்பை சேர்ந்த மாணவியின் பெற்றோர் குளிர்பானம் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் மாலதி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சகாய ராணி விக்டோரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பால மணிகண்டன் வகுப்பில் சிறந்த மாணவனாக உள்ளதால் சகாய ராணி விக்டோரியாவின் மகளுக்கும் சிறுவனுக்கும் போட்டி இருந்து வந்துள்ள நிலையில் குளிர்பானத்தின் விஷம் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

படிப்பில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக தனது மகனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்த பெற்றோரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!