பகீர்!! இருமல் மருந்து சாப்பிட்டதால் 66 குழந்தைகள் பலி!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

 

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரல் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கள் உருவாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் இருமல் மற்றும் சளிக்கான மருந்து சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட மருந்தை சாப்பிட்ட குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக 66 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகளுக்கு  காரணமாக 4 வகை இருமல் மற்றும் சளி மருந்துகள் டைமன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்டின் தயாரிக்கப்பாகும். இந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

66 குழந்தைகள் உயிரிழப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. காம்பியாவில் மருந்து சப்ளை செய்யப்பட்டது போல் மற்ற நாடுகளுக்கும் இந்த மருந்து சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.


குழந்தைகளின் உயிருக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற மருந்துகளின் நடமாட்டத்தையும், தயாரிப்பையும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.