பகீர்!! மேலும் உயர்ந்த தங்கத்தின் விலை!! கலக்கத்தில் இல்லத்தரசிகள்!!

 

இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து தங்கத்தின் விலையும் அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன.
தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் இருளடைந்த நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளது.

சீனா மற்றும் இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு தேவையினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56-க்கு உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து, ரூ.4,767-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து, ரூ.38,136-க்கு விற்பனையாகிறது. 

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,879-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 26 ரூபாய் உயர்ந்து, ரூ.3,905-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ரூ.61,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?