undefined

பகீர்!!  விழுப்புரம் அருகே   திமுக பிரமுகர்  ஓட..ஓட ..விரட்டி வெட்டிக்கொலை!!

 

விழுப்புரம் மாவட்டம் வானுர் அருகே உள்ள கோட்டக்கரை பகுதியில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். இவர் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவரது தாய் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்இந்த நிலையில் நேற்று இரவு தனது சொந்த வேலை காரணமாக கோட்டக்கரையில் இருந்து திருசிற்றம்பலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜெயக்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

சுதாரித்து கொண்ட ஜெயக்குமார் அங்கு இருந்து தப்ப முயன்றார். அப்போது அவரை விரட்டி சென்ற கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அரிவாளால் வெட்டிச்சரித்து தப்பி சென்றது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த ஜெயக்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

 இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் திமுக பிரமுகர் ஜெயக்குமார் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. திமுக உறுப்பினர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.