undefined

பகீர்!! மகளை மொட்டை அடித்து  துரத்தியடித்த பெற்றோர்!! காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்!!

 

 

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மாதவ். இவர் பக்கத்து ஊரில் வசித்து வரும் அட்சிதாவை  காதலித்து வந்தார்.  6 மாதங்களுக்கு முன் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.  பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இதில் அச்சிதாவின் பெற்றோர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தனர். ஊரார் பேச்சால் இந்த வருத்தம் ஆத்திரமாக மாறியது. அட்சிதாவை பழிவாங்க திட்டமிட்டனர். உறவினர்களுடன் காரில் அட்சிதா வீட்டுக்கு சென்ற பெற்றோர் அவரை மிரட்டியுள்ளனர். அட்சிதாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறிஅவரை கடத்தினர். வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அச்சிதாவுக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து குடிக்க செய்து, அவரை அலங்கோலப்படுத்தவும் முடிவு செய்தனர்.

வீட்டிலேயே அவரை உட்கார வைத்து  மொட்டை அடித்தனர். பின்னர் அவமானப்படுத்தி கணவன் வீட்டிற்கு விரட்டி விட்டனர். இச்சம்பவம் குறித்து அச்சிதா காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  இளம் பெண்ணை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியதாக, அவருடைய பெற்றோர் மற்றும் தாய்மாமனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!