பகீர்! ரூ. 250 பீஸ் கட்டலைன்னு அடிச்சே கொன்னுட்டாரு! கதறி அழும் பெற்றோர்!

 

ரூ.250 பீஸ் கட்டவில்லை என்று மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவனை அடித்தே கொன்றிருக்கிறார் ஆசிரியர். உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் சிர்சியா பகுதியில் பண்டிட் பிரம்மதட் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அனுபம் பதக் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சிறுவனின் மாமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆசிரியர் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் கே மவுரியா கூறுகையில், “ஆசிரியர் அனுபம் பதக் தாக்கியதில் மாணவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மாமா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஆசிரியர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என்றார்.

இதனிடையே பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறியே ஆசிரியர் மாணவனை அடித்துக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து இறந்த மாணவனின் சகோதரர் ராஜேஷ் விஸ்வகர்மா கூறுகையில், “மாதம் ரூ.250 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி வருகிறோம்.

இது தெரியாமல் ஆசிரியர் என் தம்பியை தாக்கி கொன்று விட்டார். மேலும், என் தம்பியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. ரத்தக் கசிவும் ஏற்பட்டு உள்ளது. அந்த ஆசிரியர் என் தம்பியை கொன்று விட்டார்.” என்று கதறி அழுதார்.  மாணவனின் மரணத்துக்கு நீதி கோரியும், அடித்துக் கொன்ற ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!