பகீர் வீடியோ!! அரை நிர்வாண கோலத்தில் ராகிங்!! மருத்துவக்கல்லூரியில் அட்ராசிட்டி !!
கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் மருத்துவக்கல்லூரிகளில் சற்று அதிகப்படியாகவே இருக்கலாம். ஆனால் ராகிங் செய்வதால் ஆபத்துக்கள் ஏற்பட்டால் அது குற்றமாகும் . சமீபத்தில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலானது.
இது குறித்து கல்லூரி முதல்வர் விடுத்த அறிக்கையில் கல்லூரி கமிட்டிக்கு ஒரு ரகசிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடாமல் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்ததாக கூறி இதே கடிதத்தின் பிரதி ஒன்று சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலானது. இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது எனவும், இதற்கு காரணமானவர்கள் மற்றும் விடுதி வார்டன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!