பகீர் ரிப்போர்ட்!! மாதா மாதம் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை!! 205 பேர் பலி!!

 


மகாராஷ்டிரா  மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும்  தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யவத்மால் மாவட்ட கலெக்டர் வேதனை தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கின் போது பொருளாதார வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து யவத்மால் மாவட்ட கலெக்டர் அமோல் யெட்ஜ் கூறுகையில், ‘‘கடந்த ஆகஸ்டு மாதம் 48 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது இந்தமாதம் தொடங்கி 2 வாரங்கள் ஆன நிலையில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 205 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர் தற்கொலைகளை தடுக்க எங்களுடைய கமிட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எனவே விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அதன் சாதக, பாதக விசயங்களை கண்டறியும்.எப்போதும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். அரசு திட்டத்தின்படி, அரசு அதிகாரிகள் இன்றும், நாளையும் ஒரு நாள் விவசாயிகளுடன் அமர்ந்து, குறைகளை கேட்டறிவோம். அதன் மூலம் அவர்களிடம் அரசின் திட்டங்கள் மற்றும் பலன்களை எடுத்துரைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு கணக்கின்படி மராட்டத்தியல் கடன் தொல்லை காரமாக 2,547 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். அதற்கு அடுத்த ஆண்டான 2021ல் 2,498 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மராட்டிய மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2001 முதல் 2019 வரையிலான மொத்தம் 20 ஆண்டுகளில் 32 ஆயிரத்து 605 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் தொடர் தற்கொலையால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!