உஷார்! இன்று முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்! 

 

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு சோதனை முறையில் சென்னையின் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன் கூட்டியே உங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்க. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தினசரி வாடிக்கையாகி விட்டது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோதனை அடிப்படையில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 


அதன்படி கோயம்பேடு முதல் வடபழனி வரையிலான 100 அடி சாலையில் நாளை  ஜூலை 23 முதல்  தொடர்ந்து  10 நாட்களுக்கு  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.  கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மைய தடுப்புச்சுவர் மூடப்பட உள்ளது. 


செப் கேம் வில்லேஜ் சந்திப்பு, வடபழனி பாலத்தின் கீழ் ஆகிய 2 'யூ டர்ன்'ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.  அதேபோல், விநாயகபுரம் சந்திப்புக்கும், பெரியார் பாதை சந்திப்புக்கும் இடையே அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையே 'யூ டர்ன்'  புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.


அத்துடன்  பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் 'யூ டர்ன்' உருவாக்கப்பட்டுள்ளது. வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதிதாக அமைந்துள்ள 'யூ டர்னில்' திருப்பி கொண்டு செல்லலாம்.
வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார் பாதை சந்திப்பில் வலது பக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள 'யூ டர்னில்' திரும்பிக் கொள்ளலாம்.

விநாயகபுரம் சந்திப்பில் எம்.எம்.டி.ஏ. காலனி வலதுபுறம் திரும்பிச் செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள செப் கேம் வில்லேஜ் சந்திப்பு 'யூ டர்னில்' திரும்பிச் செல்லலாம்.
கோயம்பேடு திசையில் இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பை தாண்டி 243 மீட்டர் தொலைவில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'யூ டர்னில்' திரும்பி விநாயகபுரம் நோக்கிச் செல்லலாம்.


கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள், நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் 199 மீட்டர் தூரம் சென்று 'யூ டர்ன்' எடுத்து செல்லலாம்.நெற்குன்றம் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி வடபழனி பாலத்தின் கீழ் உள்ள 'யூ டர்னில்' திரும்பிச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?