அசத்தல்.. 29ம் தேதி முதல் மீண்டும் ட்விட்டரில் ப்ளூ டிக் சேவை!

 

பிரபலங்கள் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி,   ப்ளு டிக் பெறத் தொடங்கியதால் அந்த சேவைகள்  தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் வரும் 29ந் தேதி முதல் மீண்டும் ப்ளூ டிக் சேவை தொடங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதும் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரம் வழங்கப்படும் என்றார். மேலும், பெரும் நிறுவனங்கள், பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக், அனைவருக்கும் வழங்கப்படும் என்றார். இதற்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து, உடனே அமல்படுத்தினார் எலான் மஸ்க்.   மேலும், எலான் மஸ்க் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டன. இதனால், ப்ளூ டிக் சந்தாவானது அவசர கதியில் உருவாக்கப்பட்டது.

இதனிடையே எலான் மஸ்க், இயேசு கிறிஸ்து பெயரிலேயே போலி கணக்குகள் தொடங்கப்பட்டு ப்ளூ டிக்குகள் பெறப்பட்டன. இவ்வாறு பல போலி கணக்குகள் பிரபலங்கள், பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தொடங்கப்பட்டு ப்ளூ டிக் குறியீடை பெற்றன.  

பிரபலங்கள் பெயரில் பலர் போலி கணக்குகளை உருவாக்கி, 8 டாலர் கட்டணம் செலுத்தி ப்ளு டிக் பெறத் தொடங்கியதால் அந்த சேவைகள்  நிறுத்தப்பட்டன. தற்போது தவறுகள் நேராத வண்ணம் மேம்படுத்தப்பட்ட ப்ளு டிக் சேவைகளை வரும் 29ந் தேதி முதல் வழங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!