மாணவர்களுக்கு காலை உணவு! வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

 

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. தமிழ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வை இடவேண்டும் . காலை உணவு திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். காய்கறிகளை சுத்தம் செய்தல், அவற்றை சுத்தமாக சமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு, தரத்தை உறுதி செய்ய வேண்டும். 

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுழற்சி முறையில் உணவை சுவைத்து தரத்தை அறிய வேண்டும். தரமான மற்றும் சுகாதாரமான உணவை மாணவர்களுக்கு போதுமான அளவு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வழிகாட்டு  நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!