பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் விழுந்து கொத்தனார் பலி!! 

 

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கிராமத்தில் வசித்து வந்தவர் சேதுராமன். இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். தினமும் தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கையில் நடைபெற்று வரும் கட்டிட வேலைக்காக செல்வது வழக்கம்.இந்நிலையில், வழக்கம் போல சிவகங்கைக்கு சென்ற சேதுராமன், நேற்று நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பனையூர் அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தெரியாமல் தவறி விழுந்தார். சேதுராமன் பள்ளத்தில் விழுந்த தகவல் அங்கிருந்தவர்களுக்கு இரவு நேரம் என்பதால் தெரியாமல் போனது.

அதிகாலை பாலம் கட்டும் பணியாளர்கள் வேலைக்கு வந்த போது, அங்கே சேதுராமன் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிவகங்கை தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியை நாடி சேதுராமன் மற்றும் அவரது பைக்கை மீட்டனர்.மீட்கப்பட்ட சேதுராமனை சோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இரவு நேரத்தில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்த சேதுராமன், அங்கிருந்த கம்பிகளில் குத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையில் சம்பவம் நடந்த மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அந்த பகுதியில் எந்த அறிவிப்பு பலகையோ, அல்லது இரவில் ஒளிரும் அபாய எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை. இதனால்தான் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துவிடுகிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?