சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றம்!! அதிரடி!!

 

சென்னையில் வசித்து வருபவர் யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் தமது வலைதளத்தில் தொடர்ந்து பல்வேறு தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இது குறித்து தொடர்ந்து புகார்களும், சர்ச்சைகளும் எழும்பி வந்தன. மக்களிடையே பொய்யான கருத்துக்களை பரப்புதல் நீதித்துறையை அவமதித்தல் உட்பட பல்வேறு வித குற்றங்கள் எழுந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியதற்காக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன்அவதூறு பரப்பியதற்கு  உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் "உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது" என சவுக்கு சங்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என தீவிர விசாரணை நடத்தப்பட்டது. செப்டம்பர் 1ம் தேதி  பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அந்த விசாரணையில்  ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒட்டு மொத்த நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என பேட்டி கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர் தனக்கு இது குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதனை ஏற்று வழக்கின் விசாரணை இன்று செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், யூட்யூபர் சவுக்கு சங்கர் மீதான இந்த குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றம் குறித்து பேசிய பதிவுகளை நீக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் அக்டோபர் 14ம் தேதிக்குள் டிவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனங்கள்,  பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் மதுரைசிறையில் அடைக்கப்பட்டார் அதன் பின்னர் நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் அவரை கடலூர் சிறைக்கு மாற்றுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சிறை மாற்றம் செய்யப்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!