undefined

5 வது நாளாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மீண்டும் ஆய்வு!!

 


தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை மீண்டும் தங்களத ஆய்வு பணிகளை தொடங்கினார்கள். இது மாலை 6.30 மணிவரை தொடர்ந்து நடக்கும் என்று கூறப்படுகிறது.பிரிசித்தி சிதம்பரம் நடராஜர் கோவில் அக்கோவில் தீட்சிதர்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அக்கோவிலின் வரவு, செலவு கணக்கு செலவுகளை பார்க்க தீட்சிதர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து பொது மக்களிடம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கக் கோரி சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக தீட்சிதர்கள், வரவு, செலவு கணக்கு மற்றும் நகை சரிபார்ப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பொது தீட்சிதர்கள் சார்பாக பதில் அனுப்பி வைக்கப்பட்டது.


இதை ஏற்றுக் கொண்ட அறநிலையத் துறை அதிகாரிகள், கடந்த 22ம் தேதி 6 பேர் கொண்ட குழுவாக சிதம்பரம் நடராஜர் கோவிலில ஆய்வு செய்தனர். மொத்தம் 4 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் கடந்த 2005-&2010-ம் ஆண்டுகள் வரையிலான கணக்குகள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 5வது நாள் ஆய்வு பணியை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியுள்ளனர். மாலை 6.30 மணி வரையில் ஆய்வுப்பணி தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!