அதிர்ச்சி!!  வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை!  கடிதம்  மூலம்  சிக்கிய  முக்கிய  பிரமுகர்!

வணிகவரித்துறை  உதவியாளர்  கடிதம்  எழுதி  வைத்து  விட்டு  தற்கொலை  செய்து  கொண்ட  சம்பவம்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது.

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவர் வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகனான சிவக்குமார் அரியலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிவக்குமார் எப்போதும் போல நேற்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.  இரவு மிகுந்த மன உலச்சலில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது  வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துகது.  இதனால்  சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது சிவக்குமார் பிணமாக  கிடந்துள்ளார்.

பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த  ஜெயங்கொண்டம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிவக்குமார் அருகில் இருந்த கடிதத்தை பறிமுதல் செய்த போலீசார்  கடிதத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதில், சிவகுமார் ஜெயங்கொண்டம் கிளையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் பணத்தை கல்வி கடனாக பெற்றதாக்வும் அது தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,  தனது தந்தை ராஜா, நேற்று வங்கிக்கு சென்று 50,000 ரூபாய் பணத்தை செலுத்தினார் எனவும் இது தனக்கு வேதனையை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தான் நான்  மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்ரும், தனது இறப்பிற்கு பிறகு தந்தைக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் வங்கி மேலாளர் எந்தவித தொந்தரவும் கொடுக்கக் கூடாது. என கோரிக்கை வைத்துளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி கடனுக்காக வணிகவரித்துறை உதவியாளர் வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அரியலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.