நடிகர்கள் அஜீத், விஜய்  மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!! பரபரக்கும் சினிமா வட்டாரம்!!

 

தமிழகம் முழுவதும்  ஜனவரி 11ம் தேதி  நள்ளிரவு 1 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் சிறப்பு காட்சிகளாக வழங்கப்பட்டது. அப்போது சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி  தெருவில் வசித்து வரும் கல்லூரி மாணவரான அஜித் ரசிகர் பரத்குமார் (19) நண்பர்களுடன் ரோகிணி திரையரங்குக்கு துணிவு பார்க்க வந்திருந்தார். ரசிகர்கள் குவிந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்ற நிலையில் லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் கீழே குதித்தபோது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு பலியானார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வக்குமார் மாநகர போலீஸ் ஆணையருக்கு இணையவழியில் புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.  அந்த புகாரில் ஜனவரி 11ம் தேதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. அப்போது இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இது மோதல், பிரச்சனையை உருவாக்கும் வகையில் உள்ளது. இதனால் நடிகர்கள் விஜய், அஜித் மீது இருபிரிவின் இடையே பகைமையை ஊக்குவித்தல்  பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன்  தியேட்டர் வளாகத்தில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யதாததால் அதன் உரிமையாளர் மீது மரணம் விளைவித்தல் குற்றத்துக்கான பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில்  நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களுக்கு திருவிழாவாய் அமைந்துள்ளன. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில்  அஜித்தின்  துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

 ஜிப்ரான் இன்னிசையில்  நீரவ் ஷா ஒளிப்பதிவில் துணிவு  திரைப்படத்தை காண ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் முதல் காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கு முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது எதிர்பாரத விதமாக அஜித் ரசிகர் 19 வயது பரத்குமார்  தவறி ரோட்டில் விழுந்தார்.

இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சிந்தாதிரிபேட்டையில் வசித்து வரும் பரத்குமார் விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.