கண்டனம்!! நள்ளிரவில் கர்ப்பிணியை அழைத்து வந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ1500  அபராதம்!! 

 

காவல்துறையினரும், அரசு ஊழியர்களும் பொதுமக்களிடையே மரியாதையாக கண்ணியம் குறையாமல் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும்  நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறதுநள்ளிரவில் ஆட்டோவில் கர்ப்பிணியை அழைத்து வந்த டிரைவரை மடக்கி கீழே இறக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர், அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக ரூ.1500 அபராதம் வசூல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக் கூடாது, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என உயர் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தாலும் சில போலீசார் பொதுமக்களிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதும், அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோவில் கர்ப்பிணி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு ஒருவர் வந்துள்ளார்.அது ஒருவழிப்பாதை என்பதால் அந்த ஆட்டோவை மடக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி 1500 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர், ஐயா இரவு நேரம் என்பதாலும் ஆட்டோவில் கர்ப்பிணி உள்ளதாலும் அவசரமாக செல்ல வேண்டும். மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.

ஆனால், உதவி ஆய்வாளர் பாலமுரளி தொடர்ந்து அவரிடம் வாக்குவாதம் செய்து அனுப்ப முடியாது என்று மிகவும் கோபத்தோடு பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவை பதிவிட்ட நபர்கள் உதவி ஆய்வாளர் மதுபோதையில் இருந்ததாக கூறி பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவை ஷேர் செய்து பெரும்பாலானோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் இரவு 12 மணிக்கு கூட ‘உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா... கர்ப்பிணி பெண் என்று பார்க்காமல் இவ்வாறு நடந்து கொள்கிறீர்களே. இது நியாயமா’’ என்றும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!