காங்கிரஸ் எம்பி மாரடைப்பால் காலமானார்!! ராகுல் நடைப்பயணத்தில் சோகம்!!

 

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.சந்தோக் சிங் சவுத். இவர் ராகுல் காந்தியுடன்  லுதியானாவில் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டார்.  நடந்து சென்றபோது இதயத்துடிப்பு அதிகமாகி மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்சில்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இவரின் மறைவுக்கு  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விடுத்த இரங்கல் செய்தியில்  "எங்கள் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்..," என  டுவீட் செய்துள்ளார்.ராகுல்காந்தி செப்டம்பர் மாதத்தில்  கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரின், ஸ்ரீநகரில் யாத்திரையை முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் பஞ்சாபில்  இன்று காலை தொடங்கிய யாத்திரையில் ஜலந்தர் எம்.பி சவுத்ரி சந்தோக் சிங், ராகுல் காந்தியுடன் இணைந்து நடைப்பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிந்த ராகுல் காந்தி மருத்துவமனைக்கு விரைந்தார். அவரது உயிரிழப்பு காரணமாக  இன்றைய நாள் முழுவதும் யாத்திரை நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.  இவரது மறைவு குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ``“ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர்  மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. கடவுள் ஆசியால் அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார். மேலும் ஜலந்தரின் இறப்பிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.