சர்ச்சை பேச்சு! சண்டை பயிற்சியாளர் கணல் கண்ணன் கைது!

 

சண்டை இயக்குநர் கனல் கண்ணன் இன்று பாண்டிச்சேரியில் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி அமைப்பு சுற்றுப்பயணம் மற்றும் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்து முண்ணனியின் கலை மற்றும் பண்பாடு பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் கனல் கண்ணன், சென்னை மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாளொன்றுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என கூறியிருந்தார்.

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இவரது பேச்சு இரு தரப்பினருக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதால் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த நிலையில் தன் மீதான வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், புதுச்சேரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுவைச் சென்று சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?