கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் காலமானார்!
கர்நாடக சட்டசபையின் துணை சபாநாயகரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஆனந்த் மாமணி காலமானார். ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் மாமணியும் 1990களில் கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். "எங்கள் கட்சியின் எம்எல்ஏவும் மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும், அவரது குடும்பத்தினருக்கு ஆனந்த் மாமணியின் இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் வழங்கட்டும். ஓம் சாந்தி" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!