இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

 

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மனைவியும், திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயாருமான வள்ளியம்மை இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இயக்குநர் ஏ.எல். விஜய், அஜித், திரிஷா நடித்த கிரீடம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் அறிமுகமானார். முன்னதாக இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர், 2008ம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கிய விஜய், மதராசபட்டினம் திரைப்படம் மூலம் பிரபலமார். 

பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் தலைவா படத்தை இயக்கினார். தலைவா படத்தின் போது நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட்டு, 2014ல், இவருக்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணமானது. 

2017ல் கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாரகரத்து பெற்று கொண்ட நிலையில், 2019ல் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு துருவா விஜய் என்ற மகன் இருக்கிறான். 

இந்நிலையில், ஏ. எல். விஜய்யின் தாயார் வள்ளியம்மை, வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?