டாக்டர் பட்டம் பெற்ற பிரபல நடிகை!! குவியும் வாழ்த்துகள்!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்து என பல மொழி படங்ககளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌதமி, தமிழில் தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்துடம் ஜோடியாக ‘குரு சிஷ்யன்’ படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். தொடர்ந்து இவர் நம்ம ஊரு நாயகன், ரத்ததானம், வாய் கொழுப்பு, ராஜா சின்ன ரோஜா, எங்க ஊரு மாப்பிள்ளை, பணக்காரன், போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனிடையே கேன்சரால் பாதிக்கப்பட கௌதமி கமலுடம் லிவ்விங் டூ கெதர் வாழ்கையில் பல வருடம் ஒன்றாக இருந்து பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். தற்போது சில திரைப்படங்களிலும், சமூக சேவை போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வரும் இவருக்கு, மலேசியாவின் ஆசிய மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவர் ஆரோக்கியம் மற்றும் சமூக சேவையில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் பட்டம் பெற்ற நிகழ்வின் படங்களைப் பகிர்ந்து கொண்ட கௌதமி, "மலேசியாவின் ஆசிய மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கெளரவ டாக்டர் பட்டம் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.