undefined

பிரபல கிரிக்கெட்  வீரர்  மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணிபுரிந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவூப் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் லாகூரில் மரணம் அடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 66. ஆசாத் 2000ம் ஆண்டு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2005 முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் நடுவராக பணிபுரிந்தவர். ஐசிசியின் எலைட் பேனலில் 2006 முதல் 2013 முதல்  இடம்பெற்றவர்.

இவர் இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொண்டவர் 28 டி20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளில் நடுவராக மற்றும் டிவி நடுவராக பணிபுரிந்தவர்.  ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளிலும் அவர் நடுவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மரணமடைந்த செய்தி கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆசாத் ரவூப், மரணமடைந்ததாக வந்த செய்தி வருத்தமாக இருந்தது. அவர் ஒரு நல்ல நடுவர் மட்டுமல்ல, நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்.  என் முகத்தில் புன்னகையை வரவழைக்க பாடுபடுபவர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!