தங்கம் அதிரடி விலை உயர்வு!! கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!! 

 

இந்தியாவில் தங்கத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில காலமாக தங்கத்தை தங்கமாகவே வாங்கும் போக்கு பரவலாக மாறத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் நுகர்வை குறைக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது.

இதனால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள முடியும் என்பது மத்திய அரசின் எண்ணம். பணமதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கையால் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது வருகிறது. சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தங்கத்தின்  விலை இறக்கத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்து விற்பனையான நிலையில் நேற்று குறைந்து விற்பனையானது. இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144க்கு குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 23 ரூபாய் உயர்ந்து, ரூ.4,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 184 ரூபாய் உயர்ந்து, ரூ.38,600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,934-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 18 ரூபாய் உயர்ந்து, ரூ.3,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.63,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?