ஒரே நாளில் ரூ680 உயர்ந்த தங்கம்!! கடும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

 

இந்தியாவில் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு வீட்டிலேயே முக்கிய சேமிப்பாக இல்லத்தரசிகள் முன்பை விட தீவிரமாக சேர்க்க தொடங்கியுள்ளனர். எத்தனை தான் விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்கத்தின் மீதான  ஆசை மட்டும் குறையவே இல்லை எனலாம்.

இந்தியாவில்  மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டதிலிருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு நாள் விலை குறைந்தாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விடுகிறது. இதனால் பங்கு சந்தை பயனர்கள், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் தொடர்ந்து தங்கத்தின் விலையை  கவனித்து வருகின்றனர்.

விலை குறையும் நாட்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விடுகிறது. மேலும் தங்கத்தின் விலை உயரும். ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5000வரை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,905க்கும்,  சவரனுக்கு ரூ.680 உயர்ந்து , ஒரு சவரன் ரூ.39,240க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளியின் விலை, 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.80 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.800 உயர்ந்து, ரூ.67,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!