குட் நியூஸ்! இனி UPI செயலி மூலமாக ஏழுமலையான் தரிசனம்!

 

இனி யுபிஐ செயலி மூலமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆன்லைனில் ரூ.300 மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில்  திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பணமாகவோ அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி வசதிகளை பெற்ற பக்தர்கள் இனி QR கோடு மூலம் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பதில் முதியவர் ஒருவர் கூட்ட நெரிசலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?