undefined

ஒரே சேலையில் கர்ப்பிணி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை!! பகீர் பிண்ணனி!!

 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (22). இவர் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியை சேர்ந்த சவுந்தரராஜன் (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தம்பதியரின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி , திருவள்ளூர் மாணவி ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?