அதிகனமழை அலர்ட் வாபஸ்!! ”சண்டே”வை கொண்டாடுங்க!!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு சில வாரங்களாக பெரும்பாலான பகுதிகளில்  பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 23 ம் தேதி வரை மிக கன மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் அடிப்படையில்  மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. அதிகனமழை பெய்யத் தொடங்கும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக செய்யப்பட்டிருந்தது.


இந்தநிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிக கன மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்ப பெற்றுள்ளது. தமிழகத்தில் மழை  உண்டு. ஆனால் மிக கனமழை பெய்ய வாய்ப்பு கிடையாது எனத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களும் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!