தமிழக அரசுக்கு மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ்!! விஷவாயு தாக்கி 4 பேர் பலியான விவகாரம்!!

 

கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில்  வசித்து வருபவர் குணசேகரன்.வழக்கறிஞராக பணிபுரிந்து  வரும் இவர் வீடு கட்டத்தொடங்கினார். அதில் செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , செப்டிக் டேங்க் உள்ளே இருக்கும் சவுக்கு காம்புகளை அவிழ்க்க வேண்டியிருந்தது. இதற்காக 4 தொழிலாளர்கள்  உள்ளே இறங்கியபோது   விஷ வாயு தாக்கி பரிதாபமாக 4 பேரும் உயிரிழந்தனர்.


இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அந்த நோட்டீசில் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து தமிழக தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, கரூர் மாநகராட்சி ஆணையர் உட்பட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆனால் இதற்கு முன்பே  கரூர் மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட கட்டடத்தை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும்  உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!