யாரையும் காபி சாப்பிட கூப்பிடலை.. மோசடி செய்ததை நிரூபித்தால், பாஜக வை விட்டு விலக தயார்! நடிகை ஜெயலட்சுமி ஆவேசம்!

 

நான் மோசடி செய்திருக்கிறேன் என்று சினேகன் நிரூபித்தால், பாஜகவை விட்டு விலகி விட தயாராக இருக்கிறேன் என்று நடிகை ஜெயலட்சுமி ஆவேசமாக கூறியிருக்கிறார். முன்னதாக, பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் நடிகை ஜெயலட்சுமி மீது நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

பாடலாசிரியர் சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாக இணையதளத்தில் சினேகம் பவுண்டேசன் பெயரில் மோசடிகள் நடைபெற்று வருவதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், ‘‘‘சினேகம்’ என்ற பெயரில் நான் (சினேகன்) அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த பெயரை வைத்து நடிகையும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான நடிகை ஜெயலட்சுமி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த தகவல்களை வருமான வரித்துறையினர் என்னிடம் தெரிவித்தனர். உடனடியாக இது குறித்து எனது வழக்கறிஞர் மூலமாக ஜெயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். இருப்பினும் முகவரி தவறாக இருந்ததால் அது திரும்பி வந்து விட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது திரையுலகைச் சேர்ந்தவர்களையும், பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம் கட்சியினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து நடிகை ஜெயலட்சுமி கூறும் போது, ‘‘நான் சமாதானம் பேச யாரையும் நேரில் அழைக்கவில்லை. காபி சாப்பிடலாம், டீ சாப்பிடலாம் என்று நான் யாரையும் கூப்பிடவில்லை. சினேகன் கட்சி ஆதாயத்திற்காக என் மீது இப்படியொரு பழியை சுமத்துகிறார். சினேகம் என்ற பெயரில் அவர் அறக்கட்டளை வைத்து நடத்துவது இப்போது தான் எனக்கே தெரியும். நானும் சினேகம் என்ற பெயரில் தான் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். இதில் லட்சக்கணக்கில் எல்லாம் பணப்பரிவர்த்தனை நடக்கவில்லை. எந்த மோசடியும், தவறான செயல்களும் எனது அறக்கட்டளையில் நடக்கவில்லை.


மேலும் சினேகனிடம் நான் பேசுவதே கிடையாது. நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற போது வணக்கம் மட்டும் சொல்லியதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவ்வளவு தான். அவருடைய பெயரிலேயே நானும் அறக்கட்டளை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எனக்கு அது பற்றி தெரியாது. நான் நடத்தி வரும் அறக்கட்டளை கணக்கில் எந்த பிரச்சினையும் வரும் அளவுக்கு எந்த பணப்பரிவர்த்தனையும் நடத்தப்படவில்லை. என் மீது சினேகன் சுமத்தியுள்ள மோசடி குற்றச்சாட்டை அவர் நிரூபிக்கும் பட்சத்தில் நான் பா.ஜ.க.வில் இருந்து விலகத் தயாராக உள்ளேன்’’ என்று கூறி இருக்கிறார்.

இரு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இப்படி மோசடி புகார் குறித்து பதில் அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த நடவடிக்கை உடனடியாக காவல் துறை சார்பில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?