undefined

ஐஃப்எஸ் நிதி நிறுவனத்தில் ஐடி ரெய்டு!!  பரபரக்கும் தமிழகம்!! 

 

வேலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் வேத நாராயணன் சகோதரர்கள் ஆவர். 

இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தரப்படும் என்று பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் ஏழுந்தது. இதையடுத்து புகாரின் பேரில் காஞ்சிபுரம் பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் மூன்று இடங்களில் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகில் உள்ள மின்மினி சரவணன் என்பவர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 5 பேர் கொண்ட குழு காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும்  உள்ள இந்நிறுவனத்தின் 21 கிளை அதிகாரிகளின் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆருத்ராவை மோசடி தொடர்ந்து மீண்டும் ஒரு நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு சோதனை செய்து வருவதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?