அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை..  பெரும் அதிர்ச்சி !!

 

அமெரிக்காவில் அவ்வப்போது இந்தியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் இந்திய வம்சளி நிறை தாக்குவது இனவெறி குறித்து பேசுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக செய்திகள் வெளி வருகின்றன.

கடந்த ஆண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்ளிட்டோரை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது.
இதற்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தாலும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் தற்போது பிலடெல்பியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் டேகோனி நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 66 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, இந்த கியாஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் கியாஸ் நிலையத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.