அதிமுகவை கழட்டி விடுகிறதா பாஜக? - கடைசிநேர பரபரப்பு !!

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார்.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் உடனடியாக எட்டப்பட்டு தற்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களமிறங்குகிறார். தொகுதியில் பிரச்சாரத்தையும் இவர்கள் தொடங்கி விட்டனர்.

ஆனால் அதிமுக கூட்டணியில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணியில் இருந்த பாமக தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டனர். தேமுதிகவும் நாங்கள் எந்த கூட்டணிலும் இல்லை என கூறிவிட்டனர் அடுத்ததாக அதிமுக பாஜகவை நாடி உள்ளது. ஆனால் பாஜக தற்போது வரை எந்த ஒரு முடிவையும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. அதிமுக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே மோதல் போக்கு நிலவுவதால் பாஜக யோசிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதரவு கேட்டு வந்த எடப்பாடி. பன்னீர் தரப்பிடம் இரு அணிகளும் சேர்ந்து வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இரு அணிகளும் இணைந்து போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்ட போதும் பழனிசாமி தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என பழனிச்சாமி தரப்பு திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியானது. அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதால் யாருக்கு சின்னம் கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பழனிச்சாமி, பன்னீர் ஆகிய இருவரில் ஒரு தரப்பை ஆதரிக்க பா.ஜ.க  தயக்கம் காட்டி வருகிறது. அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் மூலம் தங்களது பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.