undefined

எடப்பாடி வழக்கில் இன்று தீர்ப்பு! அதிமுக தலையகத்தில் போலீசார் குவிப்பு!

 

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

அதிமுக பொதுக்குழு சம்பந்தமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. சென்னை, அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர்.

இதனால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.  இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.