இந்தியாவின்  மிகப் பிரபலமான  நடிகர்கள்  பட்டியல்!!   டாப் 10-ல் யார் யார்.?

 

சர்வதேச அளவிலான திரைப்படங்களுக்கு ஐஎம்டிபி தொடர்ந்து ரேங்கிங் கொடுத்து   வருகிறது. அதுமட்டுமின்றி, டாப் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனஅந்த  வகையில்  2022 ஆம் ஆண்டில்,  இந்திய  அளவில்  டாப்  10-ல் உள்ள  நடிகர்,  நடிகைகள்  தரவரிசைப்   பட்டியலை   ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. அதில்   கோலிவுட் ஸ்டார் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார்  . இவரது நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், மாறன் மற்றும் பாலிவுட்டில் தி கிரே மேன் திரைப்படம் வெளியானது.

ஒட்டு மொத்த இந்தியாவிலுமே,   அனைத்து    நடிகர்களையும்   பின்னுக்குத் தள்ளி, தென்னிந்திய, அதும், தமிழ் நடிகரான தனுஷ் முதலிடத்தைப் பிடித்திருப்பது அரது  ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.  மேலும்,  முதல் பத்து இடத்தில்,  வெறும் மூன்று இடங்களில்  மட்டுமே பாலிவுட் நடிகர்கள்  உள்ளனர்.  இரண்டாவது  இடத்தில்  இருப்பது, பாலிவுட் நடிகை ஆலியா பட்.  இவரது நடிப்பில் கங்குபாய்  கத்தியவாடி,  ஆர்.ஆர்.ஆர், டார்லிங்ஸ், பிரம்மாஸ்தரா ஆகிய படங்கள்   இந்த  ஆண்டு  வெளியாகி  நல்ல  வரவேற்பைப்  பெற்றது. மூன்றாவது இடத்தில் இருப்பது ஐஸ்வர்யா ராய் பச்சன். நான்காவது இடத்தில் இருப்பது டோலிவுட் நடிகர் ராம் சரண். ஐந்தாவது இடத்தில் கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் சமந்தா.

ஆறாவது இடத்தில் இருப்பது பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன். ஏழாவது இடத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இருக்கிறார். டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் எட்டாவது இடத்தில் இருக்கிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். கன்னட நடிகரான யாஷ் பத்தாவது இடத்தில் இருக்கிறார். உலகளவில் அறியப்படும் ஐஎம்டிபி-யின் முதல் 10 நடிகர்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் ஆட்சி செய்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.