ஆச்சரியம்!!   தாய், மகன் ஒன்றாக  அரசு பணியாளர்  தேர்வுகளில்  வெற்றி  பெற்று  சாதனை!!

அரசுத்  தேர்வை  ஒன்றாக  எழுதிய  தாயும்,  மகனும்  தேர்ச்சி  பெற்ற  வினோத  சம்பவம்   கேரளாவில்   நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியில் வசித்து வருபவர் பிந்து .   இவரது மகன் விவேக் . திருமணமான இவர் தனது கணவர் தந்த ஒத்துழைப்பு காரணமாக அரசு தேர்வுகளை எழுத விரும்பி இருக்கிறார். பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராகயும் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி படிப்பு முடித்த நிலையில் அரசு தேர்வுகளை எழுத தனது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இருவரின் ஆர்வத்தை அறிந்த பிந்துவின் கணவர், பிந்துவையும், விவேக்கையும் அதற்கான பயிற்சி மையத்தில் சேர்த்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.

பயிற்சி மையத்திற்கு தாயும், மகனும் ஒன்றாக சேர்ந்து நல்ல முறையில் படித்து அரசு பணியாளர் தேர்வுகளையும் ஒன்றாக எழுதி உள்ளனர். இதில் அதிசயம் என்னவென்றால், இருவரும் ஒன்றாக தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இது குறித்து பிந்துவின் மகன் விவேக் கூறும் போது, ‘‘நானும் எனது அம்மா பிந்துவும் பயிற்சி வகுப்புக்கு ஒன்றாகவே சென்றோம். எங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும், ஏற்பாடுகளையும் எனது அப்பா செய்து கொடுத்தார். எங்களது ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்து எங்களை வழி நடத்தினார்கள். இருவரும் ஒன்றாக படித்து ஒன்றாக தேர்வெழுதி தற்போது ஒன்றாகவே வெற்றி பெற்றுள்ளோம்.

இது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனது தந்தைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று மகிழ்ச்சியுடன் கூறினார். படிப்புக்கு வயது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மகனுடன் சேர்ந்து தாயும் அரசு தேர்வு பணியாளர் தேர்வுகளை சந்தித்து வெற்றி பெற்ற சம்பவம் இளைய சமுதாயத்திற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.