அம்மாவுக்கு மறுமணம்.. 23 வயது மகன் ஏற்படுத்திய புரட்சி !!

 

கணவரை இழந்த தாயிக்கு மறுமணம் செய்து வைத்து மகன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.  

மகாராஷ்டிரா மாநிலம் கோகல்பூர் பகுதியில் யுவராஜ் சீலே (23) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது 18ஆவது வயதில் இவரது தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இதனால், அவரின் தாயார் ரத்னா மிகுந்த கவலையில் இருந்துள்ளார். 

கணவரைப் பிரிந்த துயரால் தாய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை அறிந்தார். மேலும், உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்துள்ளார். கோகல்பூர் போன்ற கிராமப்புற பகுதிகளில் கணவரை இந்த பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து யுவராஜ் அவ்வபோது எதிர்ப்பு தெரிவிப்பராக இருந்துள்ளார். 

இந்நிலையில், தாயின் தனிமையை புரிந்துகொண்ட யுவராஜ், 45 வயதாகும் தனது தாயிக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மூன்று ஆண்டுகளாக தனது தாயிடம் பேசி ஒப்புக்கொள்ளச் செய்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து தனது நண்பர்கள் உதவியுடன் அம்மா ஏற்ற மாப்பிள்ளையை தேடும் பணியில் ஈடுபட்டார். அதன் விளைவாக மாருதி கன்வந்த் என்பவரை தாயிக்கு துணையாக தேர்வு செய்து, திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இதற்காக உறவினர்களிடம் பேசி அனைவரையும் சம்மதிக்க வைத்துள்ளார். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அவர் தனது தாயிக்கு மறுமணம் செய்து வைத்து உண்மையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று என் தாயிக்கு திருமணம். இது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். என் தாயிக்கு ஏற்ற துணையை நான் தேடிக் கண்டறிந்துள்ளேன் என நெகிழ்ச்சியுடன் யுவராஜ் கூறியுள்ளார்.