undefined

தமிழக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! ஆந்திர எல்லையில் பதற்றம்!

 

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள  சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களை குறி வைத்து கம்பு கட்டைகளைக் கொண்டு மர்ம கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்படுகிற வீடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் ஏராளமான தமிழக மாணவர்கள் சட்டம் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று கல்லூரியில் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு, தமிழகத்திற்கு புத்தூர் அருகே எஸ்.பி.புரம் சுங்கச்சாவடி வழியாக திரும்பிக் கொண்டிருந்த போது, மாணவர்களின் காரில் பாஸ்ட் டேக் இல்லாத காரணத்தால் சுங்கச்சாவடி ஊழியர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த கூறி இருக்கிறார்கள். 

 

இரு மடங்கு கட்டணம் செலுத்த மாணவர்கள் மறுப்பு தெரிவித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனை கண்ட அங்கிருந்தவர்கள் சுங்கசாவடி ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழக மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். மாணவர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களும், அவர்களுடன் வந்த பெண்கள், உறவினர்களும் காயமடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!