256 முறை ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்!! திக் திக் நிமிடங்கள்!!  

 

நாசா  எக்ஸ்பெடிஷன் 68 மிஷன் காரணமாக, இதுவரை திறந்த விண்வெளியில் சுமார் 256 முறைக்கும் மேல் விண்வெளி வீரர்கள் மிகவும் ஆபத்தான ஸ்பேஸ்வாக் நிகழ்வை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.      இதுத்தொடர்பாக நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, எக்ஸ்பெடிஷன் 68 மிஷன் தொடர்பாக (Expedition 68 mission), விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஸ்பேஸ்வாக் செய்து முடித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி வீரர்களான ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையம் ரோல்-அவுட் சோலார் அரேயை (iROSA) நிறுவுவதற்காக ஆபத்தான ஸ்பேஸ்வாக் நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்  1B பவர் சேனலின் மின் அமைப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதை மீண்டும் இயக்க தேவைப்படும் வேலைகளை சரியாகச் செய்து முடிப்பதற்காக 2 விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்வாக் செய்ய அனுப்பப்பட்டனர்.  

விண்வெளி வீரர்கள் ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் @Space_Station இன் ஸ்டார்போர்டு டிரஸ் கட்டமைப்பில் ஒரு ரோல்-அவுட் சோலார் வரிசையை வெற்றிகரமாக நிறுவினர்.  இருவரும்  7 மணி நேரம் 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 2:21 EST மணிக்கு தங்கள் விண்வெளிப் பயணத்தை முடித்தனர்.