வாட்ஸ்அப்-ன்  புதிய  அம்சங்கள்!! இது தெரியாம போச்சே!!

 

வாட்ஸ்அப் புதிய அம்சங்களை பிளாட்ஃபார்மில் தொடர்ந்து வெளியிடுகிறது. அந்த   வரிசையில் சமீபத்திய புது அம்சமாக வாட்ஸ்அப் நிறுவனம் 'அவதார்'களை (WhatsApp Avatar)   உருவாக்கி   ஷேர்   செய்யும் அம்சத்தை அறிமுகம்   செய்துள்ளதுபயனர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும்  சிறந்த  முறையில் வெளிப்படுத்த அவதாரங்கள் உதவும் என்று  வாட்ஸ்அப் கூறுகிறது.  மேலும் ஸ்டைல் ​​ மேம்பாடுகளைச் சேர்க்க உள்ளதாக வாட்ஸ்அப்  நிறுவனம்    தெரிவித்துள்ளது.  அதன்படி,  அனிமேஷன், லைட்ஸ்,  நிழல்,  மேக் அப்  இன்னும்  பல  தனிப்பயன் வசதிகள்  உள்ளன.  

இந்த அவதார்  அப்டேட்டை  வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அனைத்து தளங்களிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.   ஒருவருக்கு  அவதார் மெசேஜ்  வந்துள்ளது என்றால், அதை வழக்கம் போல் கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம். மேலும்,  அந்த  மெசேஜ்  பகுதியிலேயே   பல அவதார்கள் இருக்கும்.  அதை  பயன்படுத்தி  கொள்ளலாம். இதற்கென  தனியாக செட்டிங்ஸ்  பகுதிக்குச்  சென்று,  எதையும் மாற்றத் தேவையில்லை.  அதே போல்,  அவதாரை மாற்ற வேண்டும் என்றால் கூட, அதன் அருகிலேயே அதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. அதை கிளிக் செய்து விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.  

இதுதொடர்பாக வாட்ஸ்அப்  தாய்  நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "நாங்கள் வாட்ஸ் அப்பில் அவதாரங்களைக் கொண்டு வருகிறோம் இப்போது நீங்கள் மெசேஜ் செய்யும் போது உங்கள் அவதாரை ஸ்டிக்கராகப் பயன்படுத்தலாம். இன்னும் ஸ்டைல்கள்  விரைவில்  வரும்" என்று  தெரிவித்துள்ளார்.