பள்ளி வாகனங்களில் கேமரா, சென்சார் கருவி கட்டாயம்! அரசிதழில் உத்தரவு!

 

இனி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களில் சென்சார் கருவிகளும், கேமராக்களும் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கும் படி அனைத்து விதமான தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் கேமரா பொருத்துவது கட்டாயமாக்குவதற்கான உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனத்தில் பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்தப்படுகிறது.

பெரும்பாலானா தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி வாகனங்களிலேயே அழைத்து செல்லப்படுகின்றனர். எனவே பள்ளி பேருந்து மற்றும் வேன்களில் பயணிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் கேமரா மற்றும் சென்சார் கருவி பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன் முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி உள்துறை செயலாளரால் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கான உத்தரவை வெளியிட தமிழக அரசும் ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் முன்பக்கம் மற்றும் பின் பக்கத்தில் கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் பின்பகுதியில் சென்சார் கருவியும் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!