இனி இவருக்கு பதில் இவர் !! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  ஓய்வு!!

 

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய  தலைமை நீதிபதியாக இருந்து வருபவர்  யு.யு.லலித் . இவரது பணிக்காலம் நாளை நவம்பர் 8ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.  இவருக்கு அடுத்தபடியாக இவருடைய இடத்திற்கு  டி.ஒய்.சந்திரசூட்  பதவியேற்க உள்ளார்.


கடந்த ஆகஸ்டு மாதம் 27ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். அதற்கு முன்னர் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுக்கு பிறகு  லலித் பதவியேற்றுக் கொண்டார். எனவே லலித்தின் பதவிக்காலம் நாளையுடன் (8ம் தேதி) முடிவடைகிறது. ஆனால் நாடு முழுவதும் நாளை குருநானக் ஜெயந்தியை கொண்டாடப்படுவதல் உச்சநீதிமன்றத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசியாக இன்று தன்னுடைய பணியை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் வலைதளத்தில் இன்றைய சிறப்பு அமர்வின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து 50வது  தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் பிற்பகலில் கூடும் அமர்வில் பெலா எம்.திரிவேதி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.யு.யு.லலித் ஓய்வுக்கு பிறகு டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நவம்பர் 9-ம்தேதி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!