ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!! சிறுமி உட்பட 6 பேர் பலி!! பெரும் சோகம்!!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 11 பேர், ஆம்னி காரில், ஒட்டம் பாறை பகுதிக்கு ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக சென்றனர். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தியா (20), சரண்யா (26), ராஜேஷ் (29), ரம்யா (25), சுகன்யா (28) ஆகிய 5 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தன்சிகா (11), பெரியண்ணன் (38), புவனேஸ்வரி (17), கிருஷ்ணவேணி (45), உதயகுமார் (17), சுதா (36) ஆகிய 6 பேர் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுமி தன்சிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து ஆர்.டி.ஓ. சரண்யா மற்றும் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் துலுக்கனுர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புறவழிச்சாலை மேல்புறம் சுமார் நேற்று இரவு 12.30 மணி அளவில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி விஜயலட்சுமி தனியார் பேருந்தும் ஆத்தூர் முல்லைவாடி கிராமத்தில் இருந்து வந்த ஆம்னி வேனும் மோதியதில் ஆம்னி வேனில் வந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்‌. 11 வயது சிறுமி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான ஆம்னி வேன் ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் தங்களது உறவினரின் 30-ம் நாள் கும்பிடும் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.