அச்சச்சோ!! தடம் புரண்ட ரயில் பெட்டிகள்!! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்!! 

 

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயில்களை நிறுத்தி வைக்கும் யார்டு உள்ளது. இந்த யார்டில்  ரயில் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி, பராமரிப்பு, பழுது நீக்கல் என ரயில் பணிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று நவம்பர் 16ம் தேதி புதன்கிழமை சரக்கு ரயில் ஒன்று பராமரிப்பு பணிக்கு வந்து விட்டு சீரானதும் மீண்டும் புறப்பட்டது.

ரயில் சிறிது தூரம் சென்ற பிறகு அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளப்பாதையிலிருந்து விலகி தரையில் இறங்கியது. இதனால் சக்கரங்களில் கற்களில் உரசியதால் பெரும் சத்தம் உருவானது. உடனடியாக லோகோ எஞ்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி கோட்ட ரயில் ஊழியர்கள், பொறியாளர்கள், சிக்னல் சரிபார்ப்பவர்கள் அனைவரும் தடம் புரண்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

தடம் புரண்ட ரயில் பெட்டிகளை நிலையில் நிறுத்தி இயக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த தண்டவாளத்தில் வரக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் சென்னை குருவாயூர் செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!