தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ மீண்டும் கொட்டப்போகும் கனமழை!

 

தமிழகத்தில் இந்த வாரம் ஒரு பெரிய ப்ரேக்.. தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி இருக்கும் வெள்ள நீரை அரசு ஊழியர்களும், மக்களும் சேர்ந்தே வெளியேற்றினார்கள். அதற்கு முபாக  பெய்த வடகிழக்கு பருவ மழை, ஒரு வார காலம் ப்ரேக் விட்ட நிலையில், மீண்டும் நாளை முதல் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் நவம்பர் 21ம் தேதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்த நிலையில், மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழி பகுதியில் கனமழை காரணமாக நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.

தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ள நிலையில், அதன் எதிர்திசையில், வறண்ட காற்று பகுதி உருவாகியுள்ளது. 

இந்நிலையில், நாளை நவம்பர் 20ம் தேதி மிதமான மழையும், நாளை மறுதினம் நவம்பர் 21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை நவம்பர் 21ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை குறிக்கும் விதமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!