மக்களே உஷார்!! தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!! இடி , மின்னலுடன் மழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள்!!

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று  கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.  இன்று மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி மேலும் வலிமை அடையும்.  இதனால் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் , மேற்கு வங்கத்தில் தீவிர கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் தமிழகத்திலும்  கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் , ஆந்திரா, கேரளாவிற்கு இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு தீவிர கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. 
கடலோர மாவட்டங்களில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் இடி, மின்னல் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  இயல்பை விட  94%  அதிகம் மழை பெய்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?