சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!

 

மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் அறிவித்துள்ளது. திடீர் நிலநடுக்கத்தால் பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் குடும்பம், குடும்பமாக தஞ்சமடைந்ததால், பெரும் பதற்றம் நிலவியது.

சமீப காலமாக பல்வேறு நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்தியா, அந்தமான் நிகோபர் தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதுவும் சில மணிநேரங்களிலேயே விட்டு விட்டு மழை பெய்வது போல் விட்டுவிட்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.


இன்று காலை 8.59 மணியளில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தென்மேற்கே 566 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், குடும்பம், குடும்பமாக சாலையில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், மேலும்  பாதிப்பு விவரங்கள் குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. 

கடந்த 6  நாட்களுக்கு முன்னர் இரவு 9.30 மணியளவில் (செவ்வாய் கிழமை) சுமத்ரா தீவின் தென்மேற்கு கடலோர பகுதியில் நீர்நிலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது பெங்குலு, தெற்கு சுமத்ரா மற்றும் லாம்பங்க் மாகாணங்களில் உணரப்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் கடற்கரையில் இருந்து 64 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பூமியில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு பக்கம் நிலநடுக்கமும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது என்று புவியியல் வல்லுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.